ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாத நபருக்கு ரூ.10,000 அபராதம்.. போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு!

 
ஆம்புலன்ஸ்

ஹரியானா மாநிலம் குருகிராமில், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால், போக்குவரத்து போலீசார் இனி 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் இருந்தே போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.


குருகிராம் போக்குவரத்து காவல்துறையின் மண்டல அதிகாரியும் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்வார் என்று டிசிபி (போக்குவரத்து) வீரேந்திர விஜ் கூறினார். ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை போன்ற அவசர சேவைகளின் வாகனங்களுக்கு வழிவிடாத குற்றவாளிகளுக்கு தாமதமின்றி ஆன்லைன் சலான் வழங்கப்படும் என்று டிஜிபி கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவுடன் சலான்கள் வழங்கப்படும் என்றார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் 194இ பிரிவின் கீழ் குற்றத்திற்கான சலான் தொகை ரூ.10,000. ஆபத்தான நிலையில் ஆம்புலன்சில் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்களைக் காப்பாற்ற இது உதவும் என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

டிஜிபி விஜ் கூறுகையில், குருகிராம் போக்குவரத்து போலீசார் ஏற்கனவே ஆம்புலன்ஸ்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை எடுத்துச் செல்வதற்கும், ஆபத்தான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் பசுமை வழித்தடங்களை வழங்குகிறார்கள். ஏனெனில் இங்கே பிரசித்தி பெற்ற மருத்துவமனைகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!