பரபரப்பு… ஊழல் புகாரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது!
2019-ம் ஆண்டு சிமெண்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட 317 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திட்டம் தொடங்குவதற்கு முன்பே 10 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ததாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
#WATCH | Andhra Pradesh: Criminal Investigation Department (CID) serves arrest warrant to TDP chief and former Andhra Pradesh CM N Chandrababu Naidu.
— ANI (@ANI) September 9, 2023
(Video Source: TDP) pic.twitter.com/9AE4Xrdorm
இதுதொடர்பான வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து ஆந்திரா முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதி - திருமலை இடையே மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!