இன்றே கடைசி... ஆசிரியர்களே... நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் 50 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று குடியரசு தலைவர் கையால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரியும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று ஜூலை 24ம் தேதி புதன்கிழமைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கல்வித்துறை நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு ரூ10000, வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா