சவுக்கு சங்கர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அவருக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜூலை 7-ந்தேதி சுரேஷ் என்பவரை ஆயுதங்களுடன் மிரட்டியதாக கூறி, ஜூலை 10-ந்தேதி ஏழுகிணறு போலீசார் என்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட பொய் வழக்கு என்பதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் கே.மு.டி. முகிலன், “போலீசார் சம்மன் வழங்க சென்றபோது, சவுக்கு சங்கர் அதனை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” என்று வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதி, “போலீசார் புதிய சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வேண்டும். அதன்படி, சவுக்கு சங்கர் நேரில் ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது” எனவும் கூறி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
