காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை... முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு!

 
திரிஷா - மன்சூர் அலிகான்

இன்று காவல் நிலையத்தில் ஆஜராக சொல்லி, நடிகர் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தனக்கு தொண்டை வலி இருப்பதால் இன்று ஆஜராகவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி நடிகர் மன்சூர்அலிகான் மனுதாக்கல் செய்துள்ளார்.

Image

லியோ திரைப்படத்தில் நடித்த போது, நடிகை த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என்றும், நானும் த்ரிஷாவைக் கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறும் என்றிருந்தேன் என்று பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் ரோஜா, குஷ்புவைக் குறித்தும் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

நடிகர் மன்சூர் அலிகானின் இந்த பேட்டிக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்களும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சத்யராஜ் த்ரிஷா ப்ரியதர்ஷன்

நடிகர் சங்கமும், மன்சூர் அலிகான் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த நிலையில், தான் தவறு ஏதும் செய்யவில்லை என்றும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும் மன்சூர் அலிகான் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த  விவகாரத்தில் விசாரணைக்கு நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தனக்கு தொண்டை வலி இருப்பதால் நேரில் ஆஜராகவில்லை என்று மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்துள்ளார். இன்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web