16 வயசு தான்... பள்ளி மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு.. பெரும் சோகம்!
சமீபகாலமாக இளவயது உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களின் திடீர் மாரடைப்பு மரணங்கள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் உள்ள தனியார் பள்ளியில் யதேந்திரா என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவன் பள்ளி முடிந்த பிறகு நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுள்ளான். வீட்டிற்கு வந்ததும் யதேந்திரா திடீரென மயங்கி விழுந்துள்ளான்.

சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். மாரடைப்பால் மாணவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக இத்தகவலை பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு தெரிவித்தது.

மாணவனின் மாணவனுக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் அதற்காக சிறுவயதிலிருந்தே அவருக்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். நேற்று முன்தினம் யதேந்திரன் தன்னுடைய 16 வது பிறந்தநாளை நண்பர்களுடன் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளான். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அடுத்த நாளே திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
