விஜய் மகன் இயக்கும் படத்தில் ஹீரோ இவர்தான்!!

 
ஜேசன் சஞ்சய்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.  ஜேசன் சஞ்சய்  கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் குறித்து   படித்து வந்தார்.   ஜேசன் சஞ்சய் “trigger” எனும் சிறிய குறும்படம் ஒன்றை ஏற்கனவே இயக்கி இருந்தார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குவதாக கடந்த   சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பும், புகைப்படங்களும் வெளியாகின.  

ஜேசன் சஞ்சய்

இதனையடுத்து அவர் இயக்கும் படத்தில் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் விஜய் மகன் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க பிரபல நடிகர்களான, கவின், ஹரிஸ் கல்யாண், அதர்வா இவர்களிடம்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவியது.இத்திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   படத்தின் கதைக்கு கவின் சரியாக இருப்பதால் ஜேசன் சஞ்சய் அவரை தேர்வு செய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  

ஜேசன் சஞ்சய்

”டாடா ” எனும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த கவின் இந்த படத்திற்கு சரியான முறையில் செட் ஆவார் எனத் தெரிவித்துள்ளார்.  இது குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின் தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web