காதலியை உயிரோடு எரித்து கொலை!! காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

 
முருகன்

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தில்   வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி விசாலாட்சி.   இவருக்கும் மேட்டுத்தெருவில் வசித்து வரும்  ஏழுமலை மகன் முருகன். இவர்  கடந்த 3 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு  இருந்துள்ளது. இந்நிலையில் கணவருக்கு இந்த தகவல்   தெரிய வந்ததால்  விசாலாட்சி  முருகனுடன்   உறவை முறித்துக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. 

தீ வைத்து கொலை
ஆகஸ்ட்   19ம் தேதி இரவு  விசாலாட்சியை மொபைல்  மூலம் தொடர்பு கொண்டு நகர் கிராமம் ஆலமரம் அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு வரும்படி கூறினார்.   இது குறித்து அனைவரிடமும் கூறி விடுவேன் என முருகன் மிரட்டல் விடுத்துள்ளார்.  இதனால் மன வேதனை அடைந்த  விசாலாட்சி,  முருகனை மிரட்டுவதற்காக தனது கையில் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார்.   இனிமேல்  என்னை தொந்தரவு செய்தால் நான் மண்ணெண்ணெயால் தீக்குளித்து உயிரிழப்பேன்.   இதற்கு நீ தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.  

போலீஸ்

இதனால் ஆத்திரமடைந்த முருகன் விசாலாட்சி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனைப் பறித்து அவர் மீது ஊற்றி, தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் உடலில் தீப்பற்றிய விசாலாட்சி, வலியால் அலறி துடித்தார்.   விசாலாட்சி மீது பற்றிய தீயை  அணைத்து, அவரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள்   தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து விசாலாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்து ஏழுமலை மகன் முருகனை கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை