பகீர்.. குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து காதலி கொலை... !!

 
செல்வி

சேலம் மாவட்டம் தாரமங்கலம் சேடப்பட்டியில் வசித்து வருபவர் பசுவராஜ். இவர்  கல் உடைக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி.  பசுவராஜ், பெங்களூரு சென்று கல் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது மனைவியிடம் போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நவம்பர் 15ம் தேதி முதல் மனைவியிடம் பேசமுடியவில்லை. அவரது  போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.  உடனே பெங்களூருவில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்த போதும் இல்லை  . இது குறித்துகாவல்துறையில் புகார் அளித்தார். அக்கம் பக்கம் விசாரித்ததில் நவம்பர் 15ம் தேதி   பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு குறி கேட்க சென்றது தெளிவானது.

செல்வி

இதனையடுத்து  கோயில் பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில்  செல்வி  கோயிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் செல்வி, மர்மமான முறையில்  வாயில் நுரைதள்ளி விஷம் குடித்து இறந்திருந்தார்.   அத்துடன் அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை காணவில்லை. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு குறி கேட்க செல்வி வந்தார்.  அப்போது அங்குள்ள பூசாரி குமாருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள உறவாக மாறியது.  இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.30000  பணத்தை பூசாரி குமாரிடம் இருந்து செல்வி வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கு பெங்களூருவில் இருந்து கணவர் மூலம் குறைந்த விலைக்கு தங்ககாசு வாங்கித்தருவதாக சொல்லியுள்ளார்.

ஆம்புலன்ஸ்

ஆனால், தங்கக்காசு வாங்கிக் கொடுக்கவில்லை.  நவம்பர் 15ம் தேதி  கோவிலுக்கு வருமாறு  செல்வியை குமார் அழைத்துள்ளார்.  வந்த இடத்தில் தனது ஆசைக்கு இணக்கும்படி கூறிய போது  பணத்தை திரும்ப தராமல், உறவுக்கு வர மறுத்துவிட்டார். இதனால்  குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து, செல்வியை கொலை செய்துள்ளார். அத்துடன்  அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குறி சொல்லும் பூசாரியை வலை வீசி தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web