இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை... தவெக நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

 
உச்சநீதிமன்றம்

 கரூர்  மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில்  செப்டம்பர் 27 ம் தேதி  நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 110க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார்  மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கரூர்

இவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் குற்றவாளிகள் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது அச்சத்தால் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தலைமறைவாக இருந்து, ஒரு வாரத்திற்குப் பிறகு மனுவைத் தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் இவர்களது மனுக்களை விசாரித்தது, ஆனால் கூட்ட நெரிசலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு முன்ஜாமீனை நிராகரித்தது. இதன் பிறகு அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 
இதனையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கைப் பரிசீலித்து, விசாரணைக்கு ஏற்பாடு செய்தனர். வழக்கின் தீவிரத்தால், விரைந்து விசாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  அக்டோபர் 7 ம் தேதி  உச்ச நீதிமன்றத்தில் இந்த முன்ஜாமீன் மனுக்களின் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?