நெகிழ வைக்கும் வீடியோ... ஊழியரின் வீட்டில் காது குத்தும் விழாவுக்கு சிங்கப்பூரிலிருந்து சீர்சுமந்து வந்த முதலாளிகள்!
வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியரின் குடும்ப நிகழ்ச்சிக்காக நேரடியாக சிங்கப்பூரிலிருந்து முதலாளிகள் வருகை தந்த சம்பவம் புதுக்கோட்டையில் அனைவரையும் நெகிழச்செய்தது.
ஆலங்குடி அருகே உள்ள ரோஜா நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரின் மனைவி தனலட்சுமியுடன் இரு பிள்ளைகள் — மகள் லட்சயா, மகன் தரணீஸ்வரன் உள்ளனர். சமீபத்தில் தனது பிள்ளைகளுக்காக காது குத்தும் விழா நடத்த முடிவு செய்த ஆறுமுகம், தனது சிங்கப்பூர் முதலாளிகள் ஷ்யாம், ஆல்பர்ட் மற்றும் எஸ்தர் ஆகியோரை அன்புடன் அழைத்து அழைப்பிதழ் வழங்கினார்.
அவரது அழைப்பை ஏற்ற முதலாளிகள் மூவரும் சிறப்பு பயணமாக இந்தியா வந்து ஆலங்குடியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டனர். தமிழரின் பாரம்பரியத்தை மதித்து, தாய்மாமனாகச் சீர்சுமந்து ஆறுமுகத்தின் பிள்ளைகளுக்கு காது குத்தும் நிகழ்வில் பங்கேற்றனர்.
முதலாளிகள் வருகைக்காக ஆறுமுகம் சாரட் வண்டி, குதிரை வண்டி உள்ளிட்ட சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த அவர்களை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

ஒரு ஊழியரின் வீட்டுத் திருவிழாவிற்கு சிங்கப்பூரிலிருந்து முதலாளிகள் வருகை தந்ததும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய வரவேற்பும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
