ஹீத் ஸ்ட்ரீக் உயிரோடு இருக்கிறார்?! ஹென்றி ஒலாங்கா ட்வீட்!!

 
ஹென்றி லெஹங்கா


 புற்று நோய் முற்றிய நிலையில் செவ்வாய் இரவு ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக செய்தி வெளியானது. இதனை இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு   தனது சமூக வலைதளத்தில்  ஹென்றி ஒலாங்கா மறுத்துள்ளார். ஆனால் ஹீத் ஸ்ட்ரீக் உடல்நலம் குறித்து  நேரடி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. தனது மரண செய்தியை உயிரோடு இருக்கும்போதே வாசிக்கும் பிரபலங்களின் வரிசையில் ஹீத் ஸ்ட்ரீக்கும் சேர்ந்துள்ளார். 


 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக். இவர்  கல்லீரல் புற்று நோய் காரணமாக  காலமானார்.  அவருக்கு வயது 49. இவருடைய மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் , பிரபலங்கள் பலரும் இரங்கல்   தெரிவித்து வருகின்றனர்.  ஜிம்பாப்வே அணியில் ஜாம்பவானாக திகழ்ந்தார். இவர்  1993ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி  ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார்.  


 

இவர் 65 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1990 ரன்னும், 216 விக்கெட்டுகளும், 189 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2943 ரன்னும், 239 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். இவர் கடைசியாக  2005ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடிய பிறகு  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். வங்காளதேசம், ஜிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் . இவர் கடந்த சில வருடங்களாக  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார்.  அவரது மறைவுக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் சீன் வில்லியம்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்  தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web