4 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்..!!

 
மழை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று செப்டம்பர் 20ம் தேதி தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி கோவை,   நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை


இந்த மழை செப்டம்பர் 23ம் தேதி வரை நீடிக்கும் எனவும்,  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  செப்டம்பர் 24 மற்றும் 25   தேதிகளில் தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்   தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, வேலூர், ராணிப்பேட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும் என   சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web