19 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு ..வெதர்மேன் அதிரடி!!

 
வெதர்மேன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெதர்மேன்

நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்களுக்கு கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கோவை,   தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெதர்மேன்


சென்னையில் திடீரென பெய்த மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.  இரவு முதல் அதிகாலை வரை நிறைய மேகக் கூட்டங்கள் கடல் பகுதிகளில் இருந்து நகர்ந்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு  இதே போல திடீர் மழை சென்னையில் தொடரும் என தெரிவித்துள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web