சென்னையின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை.. வாகன ஓட்டிகள் அவதி!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வுமையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி , மீனம்பாக்கம் , ஆலந்தூர் , அசோக் நகர் , ஈக்காட்டுத்தாங்கல் உட்பட பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இன்று வார விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!