கனமழை எச்சரிக்கை: 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு தயார்நிலையில் இருக்க உத்தரவு!

 
கனமழை பெருவெள்ளம் வெள்ளம் மழை

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய பின்னர், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை செயல்பாடு அதிகரித்து வருகிறது. இதை முன்னிட்டு, அடுத்த இரு நாட்களில் கடலோர மற்றும் உள் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை

நாளை (16-ந்தேதி) கடலோரப் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி–மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை ஏற்படும் சாத்தியம் உள்ளது.

மழை

மறுநாள் (17-ந்தேதி) மழை மேலும் தீவிரமாகக்கூடும் என முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை தொடரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை துறை அவசர தயார்நிலையில் இருக்க வேண்டி 10 மாவட்ட கலெக்டர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்பு, போக்குவரத்து தடங்கல்கள், நீர் தேக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?