இன்று மதியம் 1 மணி வரை சென்னை உட்பட 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் வேகமெடுத்து வரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) மதியம் 1 மணி வரை மாநிலத்தின் 24 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டலச் சுழற்சி நிலவுவதால், இன்று முதல் 24ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் சில மாவட்டங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அருகிலுள்ள உள்மாவட்டங்களில் கனமழையும் ஏற்படலாம்.

இதன்படி, இன்று மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், அரியலூர், வேலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமான பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
