தமிழகம் முழுவதும் மீண்டும் பிச்சு உதறப் போகும் மழை... வெதர்மேன் அலெர்ட் !

 
வெதர்மேன் வெதர்மேன்
 

2025 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, அக்டோபர் மாதம் முழுவதும் ஏரிகள், குளங்கள் நிரம்புமளவுக்கு மழை பெய்தது. அதன்பின்னர் வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திரா கரையை கடந்தபோதும், தமிழகத்திலும் சென்னையிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்தது. ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களுக்கு மழை ஓய்வெடுத்தது.

மழை

நேற்று (நவம்பர் 6) மீண்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையிலும் மாலையில் சில நேரங்களில் மிதமான மழை பதிவானது. இதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது, இன்று முதல் தென் தமிழ்நாட்டில் வானிலை மாறி அடுத்த 4-5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மழை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 17, 18 வரை வறண்ட வானிலை நிலவும். இதற்கிடையில் சில இடங்களில் மட்டுமே மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 4வது வாரத்தில் வங்கக்கடலில் புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், சென்னை வானிலை மையம் இன்று ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் 8 முதல் 12 வரை தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!