பீகாரில் கனமழை; 16 லட்சம் பேர் பாதிப்பு... 13 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!

 
பீகார்
 


பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுமார் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோசி, கந்தக் மற்றும் கங்கை நதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பீகார் மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய பீகாரின் பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து வால்மீகிநகர் மற்றும் பீர்பூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 13 மாவட்டங்களில் 16.28 லட்சத்துக்கும் அதிகமானோர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேபாளத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. "நேபாளத்தில் கனமழை காரணமாக, கண்டக், கோஷி, மகாநந்தா போன்ற ஆறுகளில் நீர் வெளியேற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது" என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

கோசி ஆற்றின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீர்மட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. பீகார் முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க முழுமையாக தயாராக உள்ளனர்  ஆர்ஜேடி எம்பி மிசா பார்தி செய்தியாளர்களிடம் கூறினார். 

கோசி ஆற்றில் பீர்பூர் தடுப்பணையில் இருந்து 1968ம் ஆண்டு முதல் அதிகபட்சமாக 5.79 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.அதேபோல் வால்மீகிநகர் அணையில் இருந்து 5.38 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது, 2003ம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவில் வெளியேற்றப்பட்டது.

பீகார்

நீர்வளத்துறையின் முதன்மைச் செயலாளர் சந்தோஷ் குமார் மால், அணைகளைப் பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார். "நீர்வளத்துறையின் குழுக்கள் 247 அடிப்படையில் கரைகளை கண்காணித்து வருகின்றன, இதனால் ஏதேனும் அரிப்பு அல்லது ஆபத்து கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

தொடர் மழையால் கந்தக், கோசி, பாக்மதி, புர்ஹி கந்தக், கமலா பாலன், மஹாநந்தா மற்றும் கங்கை போன்ற ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. நேபாளத்தில் உள்ள அதிகாரிகள் கந்தக் மற்றும் கோசி தடுப்பணைகளில் கணிசமான அளவு தண்ணீரை வெளியேற்றினர். இதனால் மேற்கு மற்றும் கிழக்கு சம்பாரண், கோபால்கஞ்ச், அராரியா, சுபால், கதிஹார் மற்றும் பூர்னியா போன்ற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை