மத்தியப்பிரதேசத்தில் கனமழை... சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு.. தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

 
சுவர் இடிப்பு
 

மத்தியப் பிரதேச மாநிலம் டாட்டியா நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கனமழைக் காரணமாக ஒரு வீட்டுக்கு அருகில் இருந்த பழமையான சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்தது. 

மழை வெள்ளம்

இதில் அந்த வீட்டில் இருந்த 9 பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடந்துக்கு உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 

உத்தரபிரதேச போலீஸ்

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்ட போது கட்டிட இடிபாடுக்களுக்கிடையே இருந்து 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர், தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை