பல மாவட்டங்களில் கனமழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை? முழு விபரம்!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை மக்களின் இயல்பு வாழ்கையை பாதித்து வருகிறது. இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் இன்று அக்டோபர் 23ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு அமலாகும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டார்.
மழை தாக்கம் காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட நாளுக்குப் பதிலாக, வரும் அக்டோபர் 25ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடவாரியான கால அட்டவணை பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மழை வெள்ளப்பெருக்கால் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று தமிழகத்தில் கனமழை பெறக்கூடிய மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 24: கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையில் கனமழை.
அக்டோபர் 26: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம்

அக்டோபர் 27: மேற்கண்ட அதே மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வலுவான மழை பெய்ய வாய்ப்பு.
மழை தாக்கம் காரணமாக மக்கள் அவசியமில்லாமல் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மையத்தினால் வெளியிடப்படும் புதிய அறிவிப்புகளைப் பொதுமக்கள் அவ்வப்போது கவனிக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
