தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஒரு வாரம் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தில் இன்று முதல் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், சில மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தொடர்ச்சியாக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
