நாளை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

 
அடுத்த 2 நாட்களுக்கு நம்ம மாவட்டத்தில் தொடரும் கனமழை!
 

 

நாளை தமிழகத்தில் சென்னை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் நாளை முதல் அக்.9ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கனமழை
நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், அக்டோபர் 5-ம் தேதி நாளை மறுநாள் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை அடையாறு, வேளச்சேரி, மாதவரம், விமான நிலையம், கொரட்டூர், காசிமேடு, ஆலந்தூர், தண்டையார் பேட்டை, அயப்பாக்கம், கொரட்டூர், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கும்மிடிப்பூண்டியில் தலா 3 செ.மீ மழை, மதுரை தானியமங்களம், கள்ளந்திரி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு உள்ளிட்ட இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?