தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 7 நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

இன்று (அக். 19) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாளை அக்.20ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை அதிகரிக்கும்.

மழை

அக். 21ம் தேதி:  திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

அக். 22ம் தேதி:  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மழை தீவிரமாகும்.

அக். 23ம் தேதி:  கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக். 24ம் தேதி: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை உருவாகும்.

கனமழை பெருவெள்ளம் வெள்ளம் மழை

அக். 25ம் தேதி:  கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மேற்கு மலையோரப் பகுதிகளில் மழை அதிகரிக்கும்.

மிக கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

அக். 23ம் தேதி:  வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு
அக். 24ம் தேதி:  வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி
அக். 25ம் தேதி: நீலகிரி

மக்கள் அவதானமாக செயல்படவும், மழையின்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்கவும் வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?