தமிழகத்தில் நவம்பர் 4 வரை மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!
அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, சில மணி நேரங்களில் செயலிழக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில் இருந்து தாய்லாந்து வழியாக மியான்மர் கடல் பகுதிக்கு வரும் புதிய காற்றழுத்தம் நவம்பர் 3ஆம் தேதி உருவாகும் என கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் அரபிக்கடல் பகுதிகளில் இருந்து வங்கக்கடல் நோக்கி காற்று மாறுவதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழை பதிவு செய்யப்பட்டது. மேலும், கடலோர மாவட்டங்களில் மாலை நேரங்களில் நவம்பர் 2ம் தேதி வரை வெப்பச் சலன மழை பெய்யும் எனவும், 3ஆம் தேதி மாலை முதல் ஆந்திர எல்லை தொடங்கி மயிலாடுதுறை வரையிலான பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் பகுதியில் இருந்து வரும் காற்றுச் சுழற்சி ஒடிசா வழியாக நகர்ந்து நவம்பர் 6ஆம் தேதிக்குள் தமிழகத்தை அடையும். இதனால் வடக்கு மாநிலங்களிலிருந்து வரும் குளிர்காற்று ஈர்க்கப்பட்டு, வட கடலோர மாவட்டங்களில் மாலை, இரவுகளில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் தமிழகத்தில் நவம்பர் 4ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான அளவு வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
