சென்னையில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, சென்னையில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் அடுத்த 3 மணிநேரம் மழை தொடரும். நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
