கனமழை: ஜூலை 31 வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை; ரூ.100 கோடி நஷ்டம்.. கதறும் கர்நாடகா!
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூருவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லையனகிரி, தத்தாபீடம், சீதளய்யனகிரி பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஜூலை 31-ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் வழக்கத்தை விட 25 சதவீத மழை அதிகம் பெய்துள்ளது. காற்றுடன் பெய்த கனமழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சந்திரதுரோண மலைக்கோட்டத்தில் மலை இடிந்து விழுந்து பெரிய பாறைகள், மண், மரங்கள் சாலையில் விழுந்து வருகிறது. இதனால் முல்லையனகிரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வரும் ஜூலை 31-ம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மீனா நாகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த பகுதிகளுக்கு உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அத்துடன் தத்தாபீடம், சீதளய்யனகிரி, ஹொன்னம்மா ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
