சின்னத்திரை நடிகைக்கு ஜாக்பாட்!! வெள்ளித்திரைக்கு செலக்டட்..!!

 
ஹேமா பிந்து

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கொஞ்சம் மார்க்கெட் வந்ததும் பெரிய திரைக்கு தாவத் தொடங்கி விடுகின்றனர். வாய்ப்புக்கள் இருக்கும் வரை அங்கு விளையாடிவிட்டு மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விடுகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இதயத்தைத் திருடாதே’ என்னும் சீரியல் மூலம் பிரபலமானவர்   ஹேமா பிந்து.  இவர் சீரியல் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

ஹேமா பிந்து

 தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ தொடரில் நடித்து வருகிறார். சில நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளி திரையில் வெற்றி நடை போடுகின்றனர். அந்த வகையில்   நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் என பல நடிகைகள் பட்டியல் நீள்கிறது.  அந்த வரிசையில் தற்போது சன் டிவியில் இலக்கியா சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமா பிந்துவும் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.  ஏற்கனவே  இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஹேமா பிந்து

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறு வயது குழந்தையாக நடித்தவர்.   நடிகர் கவுண்டமணி பல வருடம் கழித்து ஹீரோவாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.   இந்த திரைப்படத்திற்கான பட பூஜையில் ஹேமா கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அத்துடன்  அந்த திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகி என்று தெரிய வந்தது. ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக ஹேமா பிந்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து  வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web