நடிகை சித்ராவின் வழக்கை 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

 
சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ரா 2020 டிசம்பர்  திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் இருந்த ஹோட்டல் அறை ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம்  குறித்து  சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட சிலர்  மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

சித்ரா


 விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருகிறார்.  2021ல் இருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.வயது  மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் வரை சென்று வர  இயலவில்லை. வழக்கின் சாட்சிகள் அனைத்தும்  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே உள்ளன.  

மக்களின் நாயகி விருது பெறும் சின்னத்திரை சித்ரா!கண்ணீரில் மிதக்கும் ரசிகர்கள்!

இதனால் இந்த  வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அவ்வாறு மாற்றப்படும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்றது. அதில்  வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுத்த நீதிபதி, வழக்கின் விசாரணையை  6 மாதங்களில் விரைந்து முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web