செம... அரசு பள்ளிகளில் அதிவேக பிராட்பேண்ட்... அதிரடி உத்தரவு... !!

 
மாணவிகள்

தமிழகம் முழுவதும்  மாநில திட்ட இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அந்த சுற்றறிக்கையில்  பள்ளிகள்  ஒருங்கிணைந்த  புதிதாக அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை  ஏற்படுத்திக்  கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கம்ப்யூட்டர்

இந்த ஆய்வகங்களில் சராசரியாக பத்து முதல் இருபது கணினிகள், புரொஜக்டா்களும் நிறுவப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.  அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சமூக வலைதளங்களில்  வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் பயன்பாடும் குறையத் தொடங்கியது.  ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக 100 mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 ஜிஎஸ்டி உட்பட கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம்.

மாணவிகள்

அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்ட் பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானியத் தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web