வைரல் வீடியோ.... குஷ்பூ உருவப்படம் செருப்பால் அடித்து , தீ வைத்து எரிப்பு... வலுக்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

 
குஷ்பூ

தமிழகத்தில்  கடந்த செப்டம்பர் முதல் ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு   மாதம் ரூ1000 வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து நடிகை குஷ்பு பிச்சைக்காசு ரூ ஆயிரம் கொடுத்தால் ஓட்டு வாங்கி விடமுடியுமா என சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பல பகுதிகளில் குஷ்புவுக்கு கண்டனமும் ஆர்ப்பாட்டமும் வலுத்து வருகின்றன. அதே நேரத்தில் தமிழகத்தில் போதை பொருள் வலுத்து வருவதாகவும், சிறார்களிடையே மிக எளிதாக இந்த பழக்கம் பள்ளி மாணவர்களிடையே பரவி வருவதாகவும் சமீபகாலமாக அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள் வெளியாகின. இதனை எதிர்த்து கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில்  தமிழகம் முழுவதும்  போராட்டம் நடைபெற்றது.  

 


அந்த வகையில் சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு  தாய்மார்களுக்கு  மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா?  என சர்ச்சையாக கேள்வி எழுப்பியிருந்தார்.  குஷ்புவின் பேச்சுக்கு பெண்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனிடையே திமுக அமைச்சர் கீதா ஜீவன், பாஜக நிர்வாகி குஷ்புவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில்  குஷ்பூ நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். நீங்கள் பெரிய நடிகை.  உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.

குஷ்பூ

 

ஆனால் இந்த மாதிரி ஆயிரம் ரூபாயில் வாழ்வாதாரத்தை பலமாக அமைத்துக் கொள்ளும் குடும்பங்கள் தமிழகத்தில் இன்னும் உண்டு. இந்த பணத்தை வைத்து தான் ஒரு மருத்துவ செலவோ , பிள்ளைகளின் படிப்பு செலவோ பார்க்கப்படுகிறது. இதனை உங்களால் உணர்ந்து கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார். 
  பாஜக நிர்வாகி குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் குஷ்புவின் உருவப்படம் எரிக்கப்பட்டது.அ பல இடங்களில் அவர் படம்  செருப்பால் அடிக்கப்பட்டு   தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்கள், கண்டண ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web