இன்று ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடக்கம்...!!

 
ஹாக்கி

13வது தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று நவம்பர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை  தொடங்கி நவம்பர்  28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஹாக்கி
 
‘ஏ’ பிரிவில் சத்தீஸ்கர், குஜராத், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தமிழ்நாடு, இமாச்சல் பிரதேசம், அசாம் அணிகளும், ‘சி’ பிரிவில் கர்நாடகா, பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ அணிகளும், ‘டி’ பிரிவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தராகண்ட் அணிகளும் ‘இ’ பிரிவில் பெங்கால், மத்தியப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர் ஆகிய அணிகளும், ‘எஃப்’ பிரிவில் ஜார்கண்ட், சண்டி கர், ஆந்திரா, கோவா அணிகளும், ‘ஜி’ பிரிவில் உத்தரப்பிரதேசம், புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான் அணிகளும், ‘ஹெச்’ பிரிவில் டெல்லி, ஒடிசா, தெலுங்கானா, அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஹாக்கி

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் 25-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி அரை இறுதி ஆட்டங்களும், 28-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.இந்தத் தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் பல்வேறு அணிகளுக்காக களமிறங்குகின்றனர். தொடக்க நாளான இன்று தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் அசாம் அணியை எதிர்கொள்கிறது. மற்ற ஆட்டங்களில் மத்திய பிரதேசம் - மணிப்பூர், மகாராஷ்டிரா - உத்தராகண்ட் ஆகிய அணிகள் மோதுகின்றன. இத்தகவலை தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் ஜே.மனோகரன் தெரிவித்தார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web