ஜூலை 20ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை!
தமிழகம் முழுவதும் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை மறுநாள் ஜூலை 20ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த ஆண்டு மகளிர் உரிமைத் திட்டப்பணிகளுக்காக கூடுதலாக விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடை ஊழியர்கள் பணிபுரிந்தனர். இந்த பணிநாளை ஈடு செய்யும் வகையில் மற்றொரு நாளில் விடுமுறை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஜூலை 20ம் தேதி சனிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் 2023 ஜூலை 23 ஆகஸ்ட் 4 தேதிகளில் விடுமுறை நாட்களில் ரேஷன் கடை ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்த 2 நாட்கள் பணிக்காலத்தை ஈடு செய்யும் வகையில் ஜூன் 15ம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விடப்படும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
