இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மோந்தா புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஈடு செய்யும் விதமாக இன்று பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாற்று பணி நாளாக கருதாமல், மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியதில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து, ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதே நேரத்தில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, புயலாக வலுப்பெற்று ‘மோன்தா’ எனப் பெயரிடப்பட்டது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த புயல் சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பின்னர் அது ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைத் தொட்டது. எனினும், அதன் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை தொடர்ந்தது.இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கடந்த 28ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
