பள்ளிகளுக்கு இன்றுடன் லீவு... 45 நாட்கள் கோடை விடுமுறை!

 
விடுமுறை விடுமுறை

 

தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் ஒரு பக்கம் தகிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், மாணவர்களுக்கு இன்றுடன் பரீட்சை காய்ச்சல் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் 23-ல் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால், ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல ஏதுவாக இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு கடந்த 1-ம் தேதி தொடங்கிய முழு ஆண்டுத் தேர்வுகள், இன்று மாலையுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைகின்றன.

விடுமுறை

தேர்வு முடிந்த கையோடு நாளை முதல் 45 நாட்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் செம குஷியில் உள்ளனர். வழக்கமாக மே மாதத்தில்தான் விடுமுறை களைகட்டும், ஆனால் இந்த முறை தேர்தலால் ஏப்ரல் பாதியிலேயே 'ஜாலி மூடுக்கு' மாணவர்கள் மாறிவிட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், வீட்டுப்பாடம் மற்றும் அதிகாலை பள்ளிக்கு ஓடும் டென்ஷன் இல்லாதது குழந்தைகளுக்கு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது.

விடுமுறை

சுமார் ஒன்றரை மாத கால விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் இனி தேர்தல் பணிகளில் பிஸியாகிவிடுவார்கள் என்பதால், மாணவர்கள் தங்களது விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுவரை புத்தகப் பைகளை பரணில் போட்டுவிட்டு, சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் கிளம்ப இப்போதே பல குடும்பங்கள் தயாராகிவிட்டன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை