பள்ளிகளுக்கு விடுமுறை.,. கலெக்டர் திடீர் உத்தரவு!

 
நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை  ஜூலை 19ம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இதனையடுத்து  தமிழகத்தில் மழை மேலும் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 18 இன்று வியாழக்கிழமை  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதிகன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!