திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணவக்கொலை... மருமகனை அரிவாளால் வெட்டிக் கொன்ற மாமனார்!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாமனார், மருமகனை அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (24) பால் வியாபாரம் செய்து வந்தார். பால் கறப்பதற்காக சென்ற இடத்தில் கணபதிபட்டியைச் சேர்ந்த சந்திரனின் மகள் ஆர்த்தி (21) என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஆர்த்தி கரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆர்த்தியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் தம்பதியினர் ராமநாயக்கன்பட்டியில் வசித்து வந்தனர். ஆனால் மாமனார் சந்திரன் தொடர்ந்து அவர்களுடன் பேசாமல் இருந்ததுடன், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறும் இருந்து வந்தது. இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை ராமச்சந்திரன் பால் கறப்பதற்காக பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கூட்டாத்து அய்யம் பாளையம் அருகே மாமனார் சந்திரன் அவரை வழிமறித்து கடுமையாக தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த சந்திரன், முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை பல இடங்களில் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மருமகன் துடிதுடித்து உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடிய சந்திரனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் உறவினர் வீட்டில் ஒளிந்திருந்ததை புலனாய்வின் மூலம் கண்டறிந்து கைது செய்தனர். இந்த சம்பவம் நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
