கொடூரம்... 5 வயது பேத்தியை வெயிலில் கட்டிப்போட்ட பெண் காவல் அதிகாரி!
பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட்டில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஒரு பெண்ணே, தனது 5 வயதுப் பேத்தியை இரும்புக்கதவில் கட்டிப்போட்டுச் சித்திரவதை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. போர்ச்சுகலில் வசித்து வரும் குழந்தையின் பெற்றோர், பாட்டி சரப்ஜித் கவுர் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வார் என நம்பி விட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அந்தப் பாட்டியோ சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தையின் கை, கால்களைக் கட்டிப்போட்டு மனிதாபிமானமற்ற முறையில் நடந்துள்ளார்.
Punjab girl tied up, left in hot sun by cop grandmother; neighbours rescue her
— IndiaToday (@IndiaToday) April 15, 2026
Punjab Police suspended the ASI after a video of her granddaughter, crying after being left outside with her limbs bound with cloth, went viral.https://t.co/8Ang47H56E
குழந்தை நீண்ட நேரமாக வெயிலில் கதறி அழுவதைப் பார்த்துத் துடித்த அக்கம் பக்கத்தினர், அதனை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. "பெண்களுக்கு உதவும் மையத்தில்" அதிகாரியாக இருந்துகொண்டு இப்படி ஒரு கொடூரத்தைச் செய்தாரா? எனப் பொதுமக்கள் கொந்தளித்தனர்.
விஷயம் சீரியஸானதை அடுத்து, ஃபரித்கோட் எஸ்எஸ்பி பிரக்யா ஜெயின் அதிரடி நடவடிக்கை எடுத்து, ஏஎஸ்ஐ சரப்ஜித் கவுரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தார். தற்போது அந்தக் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. "வேலியே பயிரை மேய்ந்த கதை"யாக, பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறை அதிகாரியே இப்படிச் செய்தது குறித்துத் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
