குத்துவிளக்கு ஏற்றிய போது சோகம்... சேலையில் தீப்பற்றி பெண் உடல் கருகி பரிதாப பலி!

 
தீ விபத்து தீ விபத்து

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரேமா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துச் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையில் விளக்கில் எரிந்துகொண்டிருந்த தீப்பொறி பட்டுத் தீப்பிடித்தது.

ஆம்புலன்ஸ்

கண் இமைக்கும் நேரத்திற்குள் தீ உடல் முழுவதும் பரவியதால் பிரேமா நிலைகுலைந்து போனார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 8-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குத்துவிளக்கு ஏற்றியபோது நேர்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை