திருச்சியில் கொடூரம்... வேலைக்குச் சென்ற இளம்பெண் எரித்துக்கொலை... காதலனை ஏமாற்றியதால் உறவினர்கள் வெறிச்செயல்!
திருச்சி மாவட்டத்தில் வேலைக்குச் சென்ற இளம்பெண் காட்டுப்பகுதியில் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சீனிவாசநகர் பகுதியைச் சேர்ந்த மீரா ஜாஸ்மின் (22). கல்லூரி படிப்பை முடித்திருந்த மீரா ஜாஸ்மின், வேலைக்காக விண்ணப்பித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் வேலைக்க்காக நேர்முகத் தேர்வுக்கு செல்வதாகக் கூறி விட்டு, வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் இரவு வரை வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசாரிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் அவரது செல்போன் டவர் சிக்னலை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடத்திய போது, எம்.ஆர்.பாளையம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் எரிந்த நிலையில் ஒரு இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தின் அருகே பீர்பாட்டில்களும் கிடந்தன. பின்னர் அந்த உடல் காணாமல் போன மீரா ஜாஸ்மின் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
மீரா ஜாஸ்மின் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், மீரா ஜாஸ்மின் கல்லூரி நாட்களில் தோழியின் அண்ணனுடன் காதலில் இருந்து வந்ததாகவும், பின்னர் அவரை பிரிந்ததாகவும் தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் ஆறு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனை பழிவாங்கும் நோக்கில் அந்த இளைஞரின் உறவினர்கள் மீராவை கடத்திச் சென்று கொலை செய்தார்களா என்பதற்கான கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவம் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
