தலை சிதறிய கொடூரம்... தண்டவாளத்தில் தலை வைத்து ஐடி ஊழியர் தற்கொலை!

 
நாமக்கல்

தண்டவாளத்தில் தலை வைத்து, ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குமடிபாளையத்தை சேர்ந்தவர் கவீன் (23). சென்னையில் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த கவீன், தனது பெற்றோருக்கு போன் செய்து, சென்னையில் இருந்து வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார். அதன்படி சென்னையிலிருந்து பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து நேற்று அதிகாலை 3.45 மணியளவில் மோகனூர் ரயில் நிலையத்தில் இறங்கினார். ஆனால் அங்கிருந்து அவர் வீட்டிற்கு செல்லவில்லை. நேரம் ஆக ஆக, வீட்டிற்கு வருவதாக சொன்ன மகன் வராததால், பெற்றோர் கவலையடைந்தபடி கவீனைத் தேட தொடங்கினர். 

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் மோகனூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில், தலை துண்டான நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் கவீன் என்பது உறுதி செய்யப்பட்டது.

போலீஸ்

முதற்கட்ட விசாரணையில் மோகனூர் ரயில் நிலையத்தில் இறங்கிய கவீன், பின்னர் அந்த பகுதியில் வந்த ரயிலின் முன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

கவினின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!