பெரும் பரபரப்பு... சாம்பார் தராததால் ஹோட்டல் மேற்பார்வையாளர் அடித்துக் கொலை.... தந்தை , மகன் கைது!

 
அருண்குமார்

செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் வசித்து வருபவர் சங்கர் . இவரது மகன்  அருண்குமார். இவர்கள் இருவரும் சென்னை பம்மல் பகுதியில் பிரபல தனியார் உணவகத்தில் பார்சல் வாங்கினர்.   அப்போது அவர்கள்  மேற்பார்வையாளர் அருணிடம் கூடுதலாக சாம்பார் கேட்டனர்.  ஆனால் அருண் இவர்களுக்கு கூடுதல் சாம்பார் தர அனுமதிக்கவில்லை. இதனால் சங்கரும்,  அருண்குமாரும்  உணவக மேற்பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அருண்குமார்

இந்த வாக்குவாதம்  ஒரு கட்டத்தில் தகராறாக மாறி இருவரும் சேர்ந்து   மேற்பார்வையாளர் அருணை தாக்கத் தொடங்கினர்.   இந்த தாக்குதலில் கீழே விழுந்த அருண், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து உடனடியாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர்  பலியான அருணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

மேலும், கொலை செய்த தந்தை சங்கர் மற்றும் மகன் அருண்குமார் இருவரையும்   கைது செய்தனர். இது குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதலாக சாம்பார் தராததால் ஹோட்டல் மேற்பார்வையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும்  பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!