இல்லத்தரசிகள் அதிர்ச்சி... மகளிர் உரிமைத் தொகையில் இந்த வகையான விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சரியாக இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சரியாக ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைத்துவிடுவதாலும், இத்திட்டத்தின் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து ஜூலை 15 ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இதன்படி அவசர அவசரமாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர்.

ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் பலர் புதிய ரேஷன் கார்டுகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவர்கள் கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தாலும், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
எல்லா தகுதிகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது.
அவர்களின் குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. அவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கட்டாயம் நிராகரிக்கப்படும். அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்பங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடையாது.

அதே நேரத்தில் தகுதியில்லாதவர்கள் யாரேனும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தால் உடனடியாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வெப்சைட்டில் சென்று அந்த பயனாளி குறித்தும் ஆன்லைனில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
