அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது எப்படி... ?

 
அயோத்தி ஷேர்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் இன்று மிக கோலாகலமாக   பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள 7000க்கும் அதிகமான விவிஐபிக்கள் வருகை தந்திருந்தனர்.   விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவில்   பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்தில் வண்ணமயமாக காட்சி அளித்தது.  ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற இன்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அயோத்தி ராமர் கோவில்

பக்தர்கள், பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அயோத்தி பால ராமரை பக்தர்கள் நாளை  ஜனவரி செவ்வாய்க்கிழமை  காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்

அயோத்தி ராமர்

இந்த சிறப்பு பூஜையில்   கலந்து கொள்ள விரும்பும் மக்கள் .https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இந்த இணையதளத்தில் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை.  இந்த  இணையதளத்தில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம். கோவில் திறக்கப்பட்டவுடன் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  நள்ளிரவு வரை தரிசன நேரத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web