வெடித்த சர்ச்சை.. ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன் முத்த காட்சி.. நோட்டீஸ் அனுப்பிய விமானப்படை அதிகாரி..!

 
ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன்

ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன் முத்தக் காட்சிக்கு விமானப்படை அதிகாரி ஒருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாலிவுட் பிரபலங்களான ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடித்த ஆக்‌ஷன் படமான 'ஃபைட்டர்' படத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ளனர். இப்படத்தில் இருவருக்கும் இடையே முத்தக் காட்சி இடம்பெற்றுள்ளது.

Fighter': Fans love chemistry between Hrithik, Deepika

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி சௌமியா தீப் தாஸ், சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து சௌமியா தீப் தாஸ் கூறுகையில், 'ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே இந்திய விமானப்படையின் சீருடையை அணிந்துகொண்டு முத்தமிடுவது போல் காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் இந்திய விமானப்படையை அவமதிக்கும் செயலாகவே கருதுகிறேன்.

Fighter' gets legal notice by Air Force officer over Hrithik-Deepika  kissing scene - India Today

இந்திய விமானப்படையின் சீருடை தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தன்னலமற்ற சேவையின் சக்திவாய்ந்த அடையாளமாகும். தனிப்பட்ட காதல் விவகாரங்களை ஊக்குவிக்கும் காட்சிக்கு இந்திய விமானப்படையின் சீருடையை பயன்படுத்துவது அதன் கண்ணியத்தை தவறாக சித்தரிக்கும் செயலாகும். எனவே இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web