கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் கண்டனப் பேரணி

 
மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று (நவம்பர் 4) கொல்கத்தாவில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. ‘மகா மிச்சில்’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் பேரணி, பிற்பகல் 2 மணியளவில் செஞ்சாலை பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து தொடங்கி, ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான ஜோராசங்கோ தாகுர்பாரி வரை சென்றது.

பேரணியில் மம்தா பானர்ஜியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். பேரணிக்குப் புறப்படும் முன் பேசிய மம்தா பானர்ஜி, “இந்த எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது மவுனமான தேர்தல் முறைகேடு. இது சிறுபான்மையினரும் உண்மையான வாக்காளர்களும் தங்களது உரிமையை இழக்கச் செய்யும் திட்டம். இது, பின்வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) அமல்படுத்தும் முயற்சி மட்டுமே,” எனக் கடும் விமர்சனம் செய்தார்.

இந்த விவகாரம், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!