இந்து பெண்ணுடன் காதல்... முஸ்லீம் வீட்டை எரித்த இந்துத்துவா அமைப்பினர்!

 
முகமது சதாம்

உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலி என்ற கிராமத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து அவருடன் ஊரை விட்டு வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அந்த நபரின் வீட்டிற்கு தீ வைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது சதாம் என்ற 21 வயது வாலிபர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள இந்து சமூகத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த வாரம் திங்கள்கிழமை இரவு ஊரை விட்டு வெளியேற நினைத்து ஊரை விட்டு வெளியேறினர்.

பெண் காணாததால் பெற்றோர் சதாம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சதாம் மற்றும் ஊரை விட்டுச் சென்ற பெண்ணைக் கண்டுபிடித்த போலீஸார், சதாமை கைது செய்து, பின்னர் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன் பிறகு பெண்ணின் பெற்றோர் சதாம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், வலதுசாரி இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சிலர், சதாம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண்ணின் பெற்றோர் மற்றும் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், இருவரையும் அமைதி காக்கும் வகையில் வலதுசாரி அமைப்புகள் சதாமின் வீடு மற்றும் கடைகளுக்கு தீ வைத்தன.

இதில் சதாம்  கடையில் இருந்த பொருட்களும், வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கலவரக்காரர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் சதாம் மீது பெண்ணைக் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் அலட்சியமாக இருந்த சில கான்ஸ்டபிள்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனினும், மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!