கணவன் , மனைவியை வெட்டிக்கொலை செய்து நகை, பணம் கொள்ளை!!
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் வசித்து வருபவர் முத்துசாமி . இவருக்கு வயது 85. இவரது மனைவி சாமியாத்தாள். இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என 3 மகள்கள் . அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். முத்துசாமியும், சாமியாத்தாளும் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றனர். நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டுக் கதவை சத்தம் எழுப்பாமல் திறந்து உள்ளே நுழைந்தனர்.
தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டி சாய்த்தனர்.அலறிய சாமியாத்தாளையும் மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில், முத்துசாமியும், சாமியாத்தாளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை முத்துசாமியின் மகள் கலையரசியின் மகன் அஜித் தாத்தா, பாட்டியை பார்ப்பதற்காக இன்று காலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததால், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் ரத்த வெள்ளத்தில் தாத்தாவும், பாட்டியும் கொலை செய்யப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உறவினர்கள், காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்துசாமி, சாமியாத்தாள் ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர். பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கொலை, கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கொலையான முத்துசாமி, வீட்டில் பாதுகாப்பிற்காக செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீரென மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!