அதிர்ச்சி... செங்கல் சூளை புகையில் சிக்கி கணவன் மனைவி பலி!!

 
அம்லு

வேலூர் மாவட்டம் கணியம்படி புதூரில் வசித்து வருபவர்  தெய்வசிகாமணி.  இவரது மனைவி அமு. இவர்களுக்கு 2  மகள்கள் சத்தியா, சினேகா, ஒரு மகன் அரவிந்த். இதில் தெய்வசிகாமணியும், அமுலுவும் அதே ஊரில்  தனியார் செங்கல் சூளையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.  நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைப்பதற்காக தீ மூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள்   சூளையை ஒட்டியுள்ள அறையில் தம்பதியினர் தங்கியிருந்தனர்.  செங்கல் சூளையில்  மூட்டப்பட்டிருந்த தீ அணையாமல் இருப்பதற்காக சூளையை ஒட்டியுள்ள அறையுடன் இணைத்து தார்பாய் போடப்பட்டிருந்தது.   நேற்று இரவு வேலூர், கணியம்பாடி உட்பட மாவட்ட முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்த சூளையில் வைக்கப்பட்டிருந்த தீ அணைந்தது. இதனால் உருவான கரும் புகை குபு, குபுவென பரவி சூளை மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள சிறிய அறையிலும் சூழ்ந்து கொண்டது.  உழைப்பின் அசதியால்  தூங்கிக் கொண்டிருந்த  கணவனும், மனைவியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருவரும்கத்தி கூச்சலிட்டனர். நள்ளிரவு என்பதால் இவர்களது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் காப்பாற்ற யாருமின்றி கணவனும், மனைவியும் அறையிலேயே மயங்கிவிட்டனர். இன்று அதிகாலை   பக்கத்தில் இயங்கி வரும் மற்றொரு செங்கல்  சூளையின் உரிமையாளரான சீனிவாசன்   அங்குள்ள அறையில் இருந்து அமுலுவின் முனகல் சத்தம் கேட்டு கதவை தட்டியுள்ளார்.

கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் அறையின் கதவை உடைத்து பார்த்தார். அப்போது தெய்வசிகாமணியும், அமுலுவும் மயங்கிய நிலையில் முனகிக் கொண்டு இருந்துள்ளனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், தெய்வசிகாமணி ஏற்கனவே உயிரிழந்து   விட்டதாக தெரிவித்தனர்.  மேலும் ஆபத்தான நிலையில் இருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும்   சிகிச்சை பலனின்றி அமுலுவும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும்   வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web