டிப்பர் லாரி பைக்கில் மோதியதில் கணவன் மனைவி பலி... !!

 
விபத்து

பெரம்பலூர் மாவட்டத்தில்  எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர்  பிச்சை . இவருடைய மகன்   கோவிந்தராஜ் . இவருக்கு வயது 24.  இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.  சேலம் மாவட்டம், நாவலூரில் வசித்து வரும்  சேகரின் மகள் ரேணுகாவுக்கும்   கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில்   சுகாஷினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கோவிந்தராஜ் திருச்சி மாவட்டம் பண்ணக்காரன்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் பைக்கில் சென்றார்.

விபத்து

 திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும், பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தனர் . அப்போது   அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று பயங்கர வேகத்தில் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கோவிந்தராஜ், ரேணுகா இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கணவன், மனைவி  இருவரும்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்ததும்  லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது   உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

ஆம்புலன்ஸ்

லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து  தனிப்படை அமைத்து அவரைத் தேடி வருகின்றனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  நள்ளிரவில்  அசுர வேகத்தில் வரும்  லாரி பேருந்து கார்கள் , டிரக்குகள் இவை   சாலையேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கவனிக்காமல் விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இம்மாதிரியான விபத்துக்கள் நெடுஞ்சாலையில் தற்போது  அடிக்கடி நடக்கின்றன.  அதே போல்  நள்ளிரவு நேரங்களில் சாலைகளில் பள்ளம் இருந்தாலும் கண்டறிய முடிவதில்லை. இவையும்  விபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம் என   சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!